தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தவிட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த பாஜக ரேஸில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.

Advertisment

Advertisment

bjp

இதில் திமுகவை பலமாக எதிர்க்கும் வகையில் ஒருவர் வேண்டும் என்று பாஜக தலைமை முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் எச்.ராஜா பெயரும், கே.டி.ராகவன் பெயரையும் குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வானதி சீனிவாசன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பலரும் அடுத்த பாஜக தலைவராக வர வாழ்த்துக்கள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மீண்டும் ஒரு பெண் பாஜக தலைவராக வாய்ப்பு இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.