ADVERTISEMENT

ரோட்டை மறித்து  இ.பி.எஸ்-க்காக மேடை!  தே.மு.தி.க.வை மதிக்காத அ.தி.மு.க!

03:00 PM Apr 09, 2024 | ArunPrakash

அ.தி.மு.க.விற்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் மாவட்டம் தான். அப்படியிருந்தும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான எஸ்டிபி கட்சிக்கு ஒதுக்கியதின் பேரில் மாநிலத்தலைவரான நெல்லை முகமதுமுபாரக் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அ.தி.மு.க.வை உருவாக்கிய தொகுதியை கூட்டணி கட்சிக்கு முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் ஒதுக்கியதால் கட்சிக்காரர்களே மனம் நொந்துபோய் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர்.

ADVERTISEMENT

ஆனால் தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி தற்போது தேர்தல் பணியில் ர.ர.க்கள் ஈடுபட்டும் வருகிறார்கள். அதை தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளரின் அறிமுகக் கூட்டம் போட்டதை தொடர்ந்து தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியிலும் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதனுடன் வேட்பாளர் முகமது முபாரக் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தான் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதுபோல் இன்று மாலை 4 மணியளவில் தேனி பங்களாமேடில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டில் பிரம்மாண்டமாக போடப்பட்ட பிரச்சார மேடையில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கூட்டணி கட்சியான எஸ்டிபி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் ஆதரவு திரட்டி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்க இருக்கிறார். இதற்காக மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான கட்சிக்காரர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. மாவட்டநிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகளுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இபிஎஸ் வருவதை தெரியப்படுத்தவில்லையாம். அதனால் நிர்வாகிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசனும், விஸ்வநாதனும் அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் கூட்டணி கட்சிகுள்ளேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் மாநகரின் மைய பகுதியான மாநகராட்சி அருகே பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதற்காக மூன்று ரோடை மறித்து மிக பிரம்மாண்டமாக மேடை நேற்று இரவிலிருந்து போடப்பட்டது.

அந்த மேடையில் தனியாக ஒரு பகுதியில் ரெடிமேட் பாத்ரூம் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வியாபாரிகள் தங்கள் கடைகளை சரிவர திறந்து வைக்கவும் முடியவில்லை அதுபோல் அப்பகுதிகளில் மக்கள் நடமாட கூட முடியாத அளவிற்கு ரோட்டை மறித்து ஸ்பீக்கர்களையும், பேரிகார்டு மற்றும் தப்பகுச்சிகளில் மின்அலங்கார லைட்டில் தலைவர்கள் படங்களையும் ரோடுகளில் பல பகுதிகளில் போட்டு ரோட்டை மறித்து வைத்து இருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் டூவீலர்களிலும், நடந்தும் கூட செல்ல முடியாமல் மாநகராட்சியை சுத்தி செல்கிறார்கள்.

ஒரு மிகப் பெரிய கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்திற்கு திண்டுக்கல் வருகிறார் என்றால் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல் பிரச்சார மேடை அமைத்து இருக்கலாமே தவிர நகரின் மையப் பகுதியில் போட்டு மக்களின் தினசரி வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் அதிமுகவினர் பிரச்சார மேடையை போட்டு இருப்பதை கண்டு திண்டுக்கல் மாநகர மக்கள் மனம் நொந்து போய் இருக்கிறார்களாம்..

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT