Advertisment

என் மீது யாரும் அதிருப்தியாகக் கூடாது... மோடி போட்ட அதிரடி திட்டம்... பதட்டத்திலிருந்த மக்கள் !

ஏப்ரல் 3-ந் தேதி காலை 9 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே, மக்கள் மத்தியில் ஒருவிதப் பதட்டம் உருவானது. பிரதமர் மோடி டி.வி.யில் இரவு 8 மணிக்கு பேசினாலே என்னவாகப் போகுதோ என மக்களுக்குப் பதற்றம் ஏற்படும். இந்த முறை பகலில் பேசினார்.எமர்ஜென்சி அறிவிப்பா,ஊரடங்கு நீட்டிப்பான்னு மக்கள் நினைத்து கொண்டுஇருக்கும் போது, ஏப்ரல் 5ந் தேதி இரவு 9 மணிக்கு லைட்டை அனைத்து விட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார்.விளக்கு இல்லை என்றால் மெழுகுவர்த்தி ஏற்றியோ,செல் டார்ச் அடித்தோ நம்முடைய பாசிட்டிவ் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்றும் சொன்னதும் எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

Advertisment

bjp

மேலும் மோடியைப் பொறுத்தவரை மாநிலங்களெல்லாம் நிதி கேட்டு வருகிறார்கள், மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்கள், தொழில்துறை சுத்தமாக முடங்கியுள்ளதுபோன்ற பல நெருக்கடிகளுக்கு மத்தியில்இருக்கிறார்.அதனால் 21 நாட்களுக்கு எதுவும் செய்யமுடியாது.மேலும் தன் மீதோ மத்திய அரசு மீதோ அதிருப்தி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று சென்ட்டிமெண்ட்டாக எமோஷனலாக ஒரு ப்ளான் வேண்டும் என்று முடிவெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.அதனால் தான் மக்கள் ஊரடங்கின்போது கை தட்டச் சொன்ன போது பலரும் அதற்கு செவி சாய்த்தார்கள்.தற்போது விளக்கு ஏற்றும்போது அது மக்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜியோடு தனக்கும் பாசிட்டிவ் இமேஜ் கிடைக்கும் என்கிற ஒரு ப்ளானும் இந்த விளக்கு ட்ரீட்மெண்ட்டுக்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment
coronavirus modi politics prime minister Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe