“People know how much ministers earn” Khushboo

Advertisment

மழைக்காலத்தில் பணிகளை மேற்கொண்டு அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ கூறியுள்ளார்.

ஆவின் பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றைக் கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக தலைவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் தலைமை தாங்கி இந்தப் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் சென்னை அடையார் பகுதியில் நடந்த போராட்டத்தில் குஷ்பூஉரையாற்றினார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நவம்பரில் மழை என்பது திராவிட மாடல் எனச் சொல்லிக்கொள்ளும் திமுக அரசிற்குத்தெரியுமா தெரியாதா? வெயில் காலத்தில் ஒன்றும் செய்யாமல் மழைக் காலத்தில் மட்டும் சாலைகளைத்தோண்டி வேலைகள்செய்கிறீர்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் மழைக் காலம் இல்லாதபோதுபணிகளை முடித்திருக்க வேண்டும்.

Advertisment

அதை விட்டு மழைக் காலத்தில் செய்யும் வேலையால் ஒரு மாதத்தில் முடியக்கூடிய வேலையை நான்கு மாதம் எடுத்துக்கொள்கிறீர்கள். அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்” எனக் கூறினார்.