Advertisment

விருதுநகரில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கம்! -போராட்ட களத்தில் கைக்குழந்தைகளுடன் இஸ்லாமிய பெண்கள்!

குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 5000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisment

people gathering for caa issue in virudhunagar

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று விருதுநகர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில், ஆண்களும் பெண்களும் குழந்தைகள் சகிதமாக கலந்துகொண்டு, குடியுரிமைச் சட்ட மசோதாவைக் கண்டித்து, பதாகைகளுடன், மத்திய, மாநில அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

குடியுரிமைச் சட்டம் திரும்பப்பெற வேண்டும், இச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகியவை போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கைகளாக இருந்தன.

Virudhunagar caa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe