pelting on Roja car; Busy in Visakhapatnam

Advertisment

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவிற்கு ஆதரவாக ரோஜா உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் கலந்து கொண்ட பேரணி நேற்றுமுடிந்தது. அமைச்சர்களும் மற்றும் மக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த ஜனசேனா கட்சித் தலைவர் பவண் கல்யானும் ஒரே நேரத்தில் விசாகபட்டினம் துறைமுகத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது பவண் கல்யானை வரவேற்க காத்திருந்த கட்சியினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் பேரணியினை முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்த ரோஜா உள்ளிட்ட அமைச்சர்களின் கார்கள் மீது சரமாரியாக கற்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.

அமைச்சர்களின் மீதான தாக்குதல் தொடர்பாக ஜனசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.