ADVERTISEMENT

உடல் மெலிந்த சிதம்பரம்... ஆதாரம் இல்லாத சிபிஐ... விரைவில் வெளிவருவார் சிதம்பரம்!

04:35 PM Oct 25, 2019 | Anonymous (not verified)

ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு விவகாரத்தில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. தொடுத்த ஐ.என்.எக்ஸ் வழக்கு வீக்கான வழக்கு தான் என்று சொல்லப்படுகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜியை ப.சிதம்பரம் சந்தித்தார் என்பதற்கான ஆதாரத்தை கூட சி.பி.ஐ.யால் காட்ட முடியவில்லை என்று கூறுகின்றனர். அப்படிப்பட்ட வழக்கில் இத்தனை நாள் ப.சிதம்பரத்தை தங்கள் சாமர்த்தியத்தால் சிறையில் வைத்து, அவரது எடையில் 5 கிலோவைக் குறைத்திருக்கிறது சி.பி.ஐ. அடுத்து ப.சி.க்கு எதிராக களமிறங்கியிருக்கும் அமலாக்கத்துறை வசம் நிறைய புதிய ஆதாரங்கள் இருக்கு என்று கூறிவருகின்றனர்.

ADVERTISEMENT



குறிப்பாக ப.சி. தரப்பு சிங்கப்பூர், மலேசியா, யு.கே. உள்ளிட்ட நாடுகளில் பழனியப்பன் உள்ளிட்ட உறவினர்கள் பலரின் பெயர்களில் சொத்துக்களை வாங்கிப் போட்டதாக கூறுகின்றனர். இதற்கான பண டிரான்சாக்ஷன் எல்லாமே எளிதில் சிக்கிக்கொள்ளும் வகையில் சாமர்த்தியம் இல்லாமல் நடத்தப்பட்டது என்று கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ப.சிதம்பரத்தின் ஆடிட்டர்கள் இருவரை அப்ரூவர் செய்து தங்கள் கைவசம் அமலாக்கத்துறை வைத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் ப.சி.மீதான இந்த வழக்கை கையாளும் அமலாக்கத்துறை இயக்குநர் ஜான் தாமஸ் ஏற்கனவே சென்னை அமலாக்கத்துறையில் இயக்குநராக இருந்தவர். அவர் தான் ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கிலும், சசிகலா, தினகரன் மீதான வழக்குகளிலும் கவனமாகச் செயல்பட்டு, தண்டனைகளைப் பெற்று கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT


அதனால் அவரின் நடவடிக்கைகளை சிதம்பரம் தரப்பு கவனமாக கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் எத்தனை காலம் சிறைவாசம் என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கும் நிலையில்... இந்த தீபாவளியை சிறையிலேயே கொண்டாடும் நிலையில் இருக்கார் ப.சி. ஆனால் அவரது தரப்பினரோ, எல்லாமே புனையப்பட்ட வழக்குகள் தான். சரியான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லை. இது அவர்களுக்கே தெரியும். இருந்தும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது என்று காங்கிரஸ் தரப்பு கூறிவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT