Advertisment

மோடியைப் பற்றி பேசிய காங்கிரஸ் நிர்வாகி கைது;  உடனடியாக ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் 

pawan khera incident high court  gives bail 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேராபத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பிரதமர் மோடி பற்றி அவரின்பெயரை உச்சரிக்கும் போது நரேந்திர கௌதம்தாஸ் என உச்சரித்து விட்டு மன்னிக்கவும்என்று கூறிய பிறகு தாமோதர்தாஸ் என கூறினார். மேலும் உண்மையிலேயே பெயரைஉச்சரிப்பதில்குழப்பம் ஏற்படுவதாகதெரிவித்தார். மேலும் பிரதமரை பற்றி குறிப்பிடும் போதுபெயர் தான் தாமோதர் தாஸ் ஆனால் செயல்கள் எல்லாம் கௌதம் தாஸ் போல இருப்பதாக தெரிவித்தார்.

Advertisment

இந்த பேச்சு கவுதம் அதானி உடன் சேர்த்து பிரதமர் மோடியை வேண்டும் என்றேஇவ்வாறு குறிப்பிட்டதாக கூறியதாகக் கூறி இது குறித்து அசாம் மாநிலத்தில் உள்ள திமாஹசாகாவல் நிலையத்தில் சாமுவேல் சாங்ஷன் என்பவர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் பவன் கேராமீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து பவன் கேராவை கைது செய்ய அசாம் போலீசார் டெல்லி வந்தனர். அப்போது பவன் கேராடெல்லி விமான நிலையத்தில் இருந்துவிமானம் ஒன்றில் பயணம்செய்ய தயாராக விமானத்தில் அமர்ந்து இருந்தார். அதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து பவன் கேராவை போலீசார் விமானத்தில் இருந்து இறக்கி விட்டனர். அப்போது அவருடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் விமானத்தை விட்டு இறங்கி கோஷமிட்டனர். அதனால் அந்த விமானம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு மாற்று விமானம் மூலம் மற்ற பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment

இவரது கைது குறித்து நேற்று உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலானஅமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும்27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன்,பவன் கேராவிற்குவரும் 28 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன்வழங்கியும் உத்தரவிட்டார்கள்.

police modi congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe