தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில்பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளைஅதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜகதொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் 05.03.2021-அன்று கையெழுத்தானது. முன்னதாகஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும்பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் 17 பெயர்கள்கொண்டவேட்பாளர்கள் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, எல்.முருகன்-தாராபுரம்,எச்.ராஜா-காரைக்குடி, எம்.ஆர்.காந்தி-நாகர்கோயில், அண்ணாமலை-அவரக்குறிச்சி, வானதி ஸ்ரீனிவாசன்-கோவை மேற்கு, குஷ்பூ-ஆயிரம்விளக்கு,சரவணன்-மதுரை வடக்கு, சி.கே.சரஸ்வதி-மொடக்குறிச்சி, கலிவரதன்-திருக்கோவிலூர்,நாயனார் நாகேந்திரன்-திருநெல்வேலி, தணிகைவேல்-திருவண்ணாமலை, பி.ரமேஷ்- குளச்சல்,குப்புராமு-ராமநாதபுரம், பூண்டி எஸ்.வெங்கடேசன்-திருவையாறு, வினோஜ்.பி. செல்வம்-துறைமுகம், விருதுநகர் -பாண்டுரங்கன், திட்டக்குடி-பெரியசாமிஎன பட்டியல் வெளியாகியுள்ளது.
வெளியான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சரவணன் திமுகவில் சிட்டிங்எம்.எல்.ஏ வாக இருந்த நிலையில், இன்று காலைதான்தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில்பாஜகவில் இணைந்தார் என்பதும், அவரது இணைவால், சரவணன் மதுரை வேட்பாளராகஅறிவிக்கப்படுவார் என்ற சந்தேகத்தில் மதுரையை சேர்ந்த பாஜகவினர் காலையிலேயே ஆர்பாட்டத்தில்ஈடுப்பட்டனர்என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அதன்படியே காலையில் கட்சித்தாவிய சரவணன் இன்று மாலையே பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.