rrr

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என ரஜினிகாந்த் சொன்னதில் இருந்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

Advertisment

ரஜினியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன. பூத் கமிட்டிகளை அமைப்பது, ரஜினி மக்கள் மன்றத்திற்குப் புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

ஜனவரியில், எந்தத் தேதியில் ரஜினி கட்சித் தொடங்குவார் என்றுஅக்கட்சியினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், எம்.ஜி.ஆர்ஆட்சியைத் தருவேன் என்று ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆகையால், வரும் ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆர்பிறந்தநாளிலேயே புதிய கட்சியை அவர் தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை. விரைவில் தகவல் வெளியாகும் என்று காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.