சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்மொழிதேவன், சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதிமுகவை பற்றிச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை வள்ளுவர் கோட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்குக் கைதட்டி ஆரவாரம் செய்துவிட்டு தற்போது அவரின் கருத்துக்கு மன்னிப்பு கோருகிறோம் என்று கூறியது ஏற்கமுடியாதது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி பற்றிக் கட்சி தலைமை முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்கள்.