மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் அங்கனூர் வாக்குச்சாவடியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் தனது வாக்கை பதிவு செய்தார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சென்னை மைலாப்பூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை அடையாறில் தனது வாக்கினை பதிவு செய்தார். பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் வாக்களித்தார்.