தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று அக்கட்சியின் முன்னாள் அகில இந்தியத்தலைவரானசோனியா காந்தியின் 75-வதுபிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்திபவனில்கொண்டாடப்பட்டது. இதில் மூத்த தலைவர் பலராமன் கேக் வெட்டினார். கோபண்ணா, சிரஞ்சீவி, சென்னை மாவட்ட தலைவர்கள் ரஞ்சன்குமார், திரவியம் மற்றும் சிவராஜசேகரன் உள்ளிட்டவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மூத்தத்தலைவர்களின் கோஷ்டி மோதல் காரணமாக இன்று நடந்த விழாவில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அரங்கமே வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்வில் வெளியிடப்பட்டிருந்த அழைப்பிதழில் இடம்பெற்றிருந்ததங்கபாலு, இ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.

Advertisment

இந்நிலையில், இன்று விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸார், ‘தலைவர்களுக்குள் என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் அகில இந்தியத்தலைவியின் பிறந்தநாள் விழாவை அனைவரும் புறக்கணித்தது சரியில்லை’ என வருந்தினர்.

Advertisment