Advertisment

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; அதிமுக சார்பில் தேர்தல் பணி குழுக்கள் அமைப்பு 

Parliamentary elections Formation of Election Working Committees on AIADMK

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அதே போன்று தேர்தல் பிரச்சாரக் குழுவில் மு. தம்பிதுரை, செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, ப. தனபால், கே.பி. அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி என 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் விளம்பரக் குழுவில் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேணுகோபால், பரமசிவம், இன்பதுரை, அப்துல் ரஹீம், ராஜ் சத்யன், ராஜலெட்சுமி என 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். முன்னதாக திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

admk
இதையும் படியுங்கள்
Subscribe