Skip to main content

திருவாரூரில் ஸ்டாலின், மதுரையில் ஓ.பி.எஸ்., சேலத்தில் இ.பி.எஸ். : களைகட்டியது தேர்தல் பிரச்சாரம் 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

கூட்டணியை இறுதி செய்து, தொகுதிகளை பிரித்து கொடுத்துவிட்டு, வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய திமுக மற்றும் அதிமுக நேற்று தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, எந்த அறிக்கை ஹீரோ என்ற பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

 

இந்த நிலையில் இன்று காலை பிரச்சாரத்தை தலைவர்கள் தொடங்கி தேர்தல் களத்தை பரபரப்பாகியுள்ளனர். திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திருவாரூர் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு, இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணன் ஆதரவு திரட்டினார். 
 

துணை முதல் அமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மக்களைத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரத்தை தொடங்கினார். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட பாலமேட்டில் முதல் நாள் பிரச்சாரத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். 
 

சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர், 39 தொகுதிகளில் சேலம் தொகுதியில்தான் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என பேசினார். 
 

தென்சென்னையில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்