Advertisment

பட்ஜெட் கூட்டத்தொடர் 5வது நாளாக ஒத்திவைப்பு; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

parliament budget session opposite party issue in fifth day

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் 13ம் தேதி தொடங்கிய இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Advertisment

நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு துவங்கியதில் இருந்து ஆளுங்கட்சி எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்தராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர்முழக்கங்கள் எழுப்பியும், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்றுஎதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும்வருகின்றனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும்கடந்த நன்கு நாட்களாக ஒத்திவைக்கப்பட்டுவந்தன.

Advertisment

இந்நிலையில், 5வது நாளாக கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுபாஜகவினர்முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று எதிர்க்கட்சிகளும் அதானி முறைகேடு தொடர்பாக கூட்டுக்குழுவிசாரணை வேண்டும் என்று இரு அவைகளிலும்மையப்பகுதிக்குச் சென்று முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் முன்புள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேதலைமையில் எதிர்க்கட்சிகள்சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதானி முறைகேடுகளைநாடாளுமன்றக் கூட்டுக்குழுஅமைத்துவிசாரிக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்பி., திமுகவின் நாடாளுமன்றகுழு தலைவர் டி.ஆர்பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த100க்கும்மேற்பட்ட எம்.பிக்கள்இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Adani congress Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe