பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார். மக்களவையில் 05.07.2019 மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும்.
தங்களது மகள், நாட்டின் நிதி மந்திரியாக மத்திய பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்யும் நிகழ்வை காண நிர்மலாவின் தந்தை நாராயணன் சீதாராமன், தாய் சாவித்திரி ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வந்தனர். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் தந்தை நாராயணன் சீதாராமன் இந்திய ரெயில்வே துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.