Advertisment

வைரலாகும் சசிகலாவின் புதிய புகைப்படம்?

sasikala

Advertisment

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. லஞ்சம் கொடுக்கப்பட்டு சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து அதுதொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது. சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் சென்று வந்ததாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சசிகலா சுடிதார் அணிந்து சிறை வளாகத்தில் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிறையில் சசிகலாவை செல்போனில் படம் பிடித்தது யார்? சிறையில் செல்போனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்களா? என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகிறார்கள். அதேநேரத்தில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Parappana Agrahara Central Prison sasikala
இதையும் படியுங்கள்
Subscribe