ஓ.பன்னீர்செல்வம் 7ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அதற்கு முன்னதாக நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதற்காக வாக்களர்களுக்கு நன்றி சொல்லும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதன்படி நாங்குநேரியில் நடந்த வாக்களர்களுக்கு நன்றி சொல்லும் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops 321_0.jpg)
அப்போது அவர் பேசுகையில், இன்னும் 15 தினத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வர இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் நாம் பெறும் வெற்றி மகத்தான வெற்றியாக இருக்கும். மாபெரும் வெற்றிகளை தந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை சொர்க்க பூமியாக மாற்றும் திட்டங்களை கொண்டுவருவோம் என்றார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சீனிவாசன், செல்லூர் ராஜூ,விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வளர்மதி, சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, பாஸ்கரன் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி உள்ளிட்ட சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Follow Us