நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைத்து நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 20ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிட்டு வெற்றிப் பெற்றது. அதன்படி நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்திக்கு ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், இன்று நடிகர் சங்கத் தேர்தலில் வென்றவர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisment