Palaniswami has said that contract nurses should be employed on a regular basis

உலகம் முழுவதும்அச்சுறுத்தி வரும் கொரோனாஇந்தியாவிலும்2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கொரோனாவின்இரண்டாம் அலையின்போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவத்துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிகசெவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில்பணியமர்த்தப்பட்டனர். இந்த ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, ஒப்பந்த செவிலியர்கள் தங்களைபணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பாமகநிறுவனர்ராமதாஸ், “கொரோனாபெருந்தொற்றுகாலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்குமேலாக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வந்த செவிலியர்களை பணிநீக்கியிருப்பதுநியாயமல்ல” என்று நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, "ஒப்பந்தசெவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைநட்டாற்றில் விட்டுள்ளது திமுக அரசு. கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம்செய்ய வேண்டும். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைமறந்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது” எனத்தனது கண்டனத்தைத்தெரிவித்துள்ளார்.