Advertisment

“‘பழனிசாமி & கோ’ தங்கள் இருப்பை காண்பிக்க இந்த வேலைகளை செய்கிறார்கள்” - டிடிவி தினகரன்

publive-image

Advertisment

அரசு எதிர்ப்பு என்பதையெல்லாம் தாண்டி பழனிசாமி தரப்பினர் தங்கள் இருப்பைக் காண்பித்துக் கொள்வதற்காகவே சில வேலைகளைச் செய்து வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராவதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினராகி ஒன்றரை ஆண்டுகளில் அவசர அவசரமாக அமைச்சராக்குவது ஏன் எனக் கேட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின் எங்குச் சென்றாலும் முத்துவேல் கருணாநிதி மகன் என்கிறார். கலைஞர் முதல்வராக இருக்கும் பொழுது முதன்முதலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டாலினை அவர் அமைச்சராக்கவில்லை. 2006 இல் பலத்த விமர்சனங்களுக்குப் பிறகு தான் அமைச்சராக்கினார். தற்போது முதல்வர் உதயநிதியை அமைச்சராக்கியதன் காரணத்தைச் சொல்லவேண்டும்.

Advertisment

அதிமுக சார்பில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். அரசு எதிர்ப்பு என்பதையெல்லாம் தாண்டி பழனிசாமி கம்பெனி தங்கள் இருப்பைக் காண்பித்துக் கொள்வதற்காக இந்த வேலைகளை எல்லாம் செய்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மீண்டும் ஒருங்கிணையுமா எனப் பழனிசாமியைத் தான் கேட்க வேண்டும்.

அதிமுகவில் பழனிசாமி மற்றும் அவருடன் சேர்ந்தவர்களின் சுயநலத்தால் அது ஒரு வட்டாரக் கட்சியாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அவர்கள் அணியாகப் பிரிந்து செயல்படுவதன் மூலம் எம்ஜிஆர் ஆரம்பித்த அந்த இயக்கம் காணாமல் போய்விடும். தேர்தல் ஆணையத்தில்தான் இரட்டை இலை சின்னம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe