Palani MLA I.P.Senthilkumar speech at dmk gramasaba meeting

ரெட்டியார் சத்திரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கன்னிவாடி பேரூராட்சி ரெட்டியார்பட்டியில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி தலைமை தாங்கினார்.

Advertisment

இதில் கலந்து கொண்ட பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், “ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் தி.மு.க. மீது பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் பொது மக்கள் தக்கப்பதிலடி கொடுப்பார்கள். தமிழக மக்களுக்கு, மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவரும்போது அதை தடுத்து நிறுத்தும் போர் வாளாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளளார்.

Advertisment

நீட் தேர்வால் பல ஏழை விவசாயிகளின் பிள்ளைகள் மருத்துவப் படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். அதன் மூலம் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பார்கள்” என்று கூறினார்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment