சட்டப்பேரவைத் தலைவர் தனபால், 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராணயன் உத்தரவிட்டார்.
இதையடுத்து டிடிவி தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தகுதி நீக்கம் விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் மனுவை தாக்கல் செய்கிறார். தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யலாம் என்பதால் சபாநாயகர் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.