Our student team is enough to discuss with Tukada politicians

Advertisment

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்வானதி சீனிவாசனுடன், மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்ககமல்ஹாசன்தயாரா? என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால் விடுத்தார்.

Advertisment

இதற்கு மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் குமரவேல் சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நேரடி விவாதத்துக்கு கமல்ஹாசன் தயாராக உள்ளதாகவும், வானதி சீனிவாசன் போன்ற துக்கடா அரசியல்வாதிகளுடன் விவாதிக்க எங்களது மாணவர் அணியே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிலளித்துள்ள வானதி சீனிவாசன், “சாதாரண குடும்பத்தில் இருந்து பொது வாழ்வில் தடைகளைக் கடந்து வரும் பெண்களை இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா? இப்படி பேசுபவர்கள் பெண்களை எப்படி காப்பாற்றுவார்கள்என்பதை மக்கள் உணர வேண்டும். இதற்கு கமல்ஹாசன் பதில் கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.