Advertisment

‘இட ஒதுக்கீடு கூடாது; இட ஒதுக்கீடு வேண்டும்’ - பா.ஜ.க., பா.ம.க. கூட்டணியை கிண்டலடித்த ஓ.எஸ். மணியன்

OS Manian strongly criticized the BJP-BMC alliance

நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார்.நாகை அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய சட்டமன்றத்தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

வேட்பாளரை அறிமுகப்படுத்தி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், "திமுக ஆட்சியில் போதை பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகிறது. ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் எனக் கூறியவர்கள் இதுவரை கொண்டு வரவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராடி வருகின்றனர்.

Advertisment

OS Manian strongly criticized the BJP-BMC alliance

இட ஒதுக்கீடு என்றாலே அறவே வேண்டாம் என்கின்ற கட்சியோடு இட ஒதுக்கீட்டிலே பிறந்து வளர்ந்தராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். இது கொள்கையே இல்லாத கூட்டணி. அன்புமணி ராமதாஸ் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காகவே கூட்டணி வைத்துள்ளனர்." என்றார்.

admk Nagapattinam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe