Advertisment

முன்னாள் எம்.பி அதிமுகவில் இருந்து நீக்கம்!

ormer MP Dismissed from admk

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தண்டனை பெற்ற சசிகலா சிறைலியிருந்து வெளியே வந்ததிலிருந்தே சசிகலாவிற்கு ஆதரவாக வரவேற்று போஸ்டர் அடித்தஅதிமுகநிர்வாகிகள் நீக்கப்பட்டனர். அதேபோல் அண்மையில் தொடர்ச்சியாக சசிகலா தொண்டர்களுடன் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதாகபேசும் செல்ஃபோன் உரையாடல் வெளியாகி அது தொடர்பானவர்களையும் அதிமுக தலைமை நீக்கி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி பரசுராமன் நீக்கப்பட்டுள்ளார்.அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் எம்.பி பரசுராமன் உட்பட 5 பேர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் எம்.பி பரசுராமன், தஞ்சை நிர்வாகிகள் ராஜமோகன், பண்டரிநாதன், பாஸ்கர், அருள்சகாயகுமார் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதால் ஐந்து பேரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

admk ops_eps politics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe