எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், எடப்பாடி தலைமையில் 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார். மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளே தொடரும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள இயற்கை விநாயகர் கோவில் மற்றும் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.