/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/syt2123.jpg)
டிடிவி தினகரனுக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பை அளித்தது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.ம.மு.க.வின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கனவாய்க்குளம் பகுதிக்கு வந்திருந்த அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அ.தி.மு.க.வின் தேனி மாவட்டச் செயலாளராக இருந்த சையது கான் தலைமையிலான நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sy121212222.jpg)
ஏற்கனவே, அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருப் பிரிவாக தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஓ.ப.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் டிடிவி தினகரனுக்கு வரவேற்பு அளித்திருப்பது அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், டிடிவி தினகரனுக்கு வரவேற்பை அளித்த சையது கான் தலைமையிலான நிர்வாகிகளின் புகைப்படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சையது கான் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us