அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்பரபரப்பைக்கிளப்பிவரும் சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாக கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அதிமுக பொருளாளர்பதவியிலிருந்துஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. மேலும், அதிமுக இடைக்காலபொதுச்செயலாளராகஎடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இன்று பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கூட்டம் முடிந்து எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர்கிரின்வேஸ்சாலை செல்வதற்கு அதிமுகஅலுவலகத்தில் இருந்துபுறப்பட்டுவந்தனர். ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் வந்தபோது, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இவர்களது வண்டியை மறிக்கமுயன்றனர். ஆனால், அதற்குள் காவல்துறையினர்அவர்களைத்தடுத்து நிறுத்தி அங்கிருந்து விலக்கிவிட்டனர். மேலும், அப்போது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், ‘அதிமுக அலுவலகத்திலிருந்தஓபிஎஸ்புகைப்படத்தைக்கிழிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்து’ கோஷங்கள் எழுப்பினர். இதனால்ராதாகிருஷ்ணன்மேம்பாலத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.