இ.பி.எஸ்.க்கு ஆதரவு கூடியது எப்படி? ரகசியம் கூறும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்! 

OPS Supporters saying that how EPS got much supporters

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 2,665 பேர் காலை 5 மணியில் இருந்தே வரத்தொடங்கினர். இந்த 2665 பேரில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக 400 பேர்இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இ.பி.எஸ்.க்கு எப்படி இவ்வளவு ஆதரவாளர்கள் என பொதுக்குழுவுக்கு கூடியிருக்கும் ஒ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘ஒட்டுமொத்தமாக ஓ.பி.எஸ் பக்கம் உள்ள அனைவரையும் வலைக்க இ.பி.எஸ். தரப்பிலிருந்து சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் டீலிங்கில் ஈடுபட்டனர். அதன் மூலமாக, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பெரும்பாலானோரை இ.பி.எஸ். பக்கம் இழுத்திருக்கிறார்கள்’ என்கின்றனர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். குறிப்பாக மாவட்ட நிர்வாகிகளை தன்பக்கம் ஈர்த்து அதன மூலம் அவர்களுக்கு கீழ் இருக்கும் நிர்வாகிகளையும் இழுத்திருக்கிறார் இ.பி.எஸ். என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

admk eps ops
இதையும் படியுங்கள்
Subscribe