/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/53_36.jpg)
ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி காலமானார். பல்வேறு தரப்பிலிருந்தும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினர்.
ஆறுதல் கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் வெளியில் வரும் பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியை கைது செய்யுங்கள். ஜெயலலிதாவை கொன்றவர்கள் அத்தனை பேரையும் பழிவாங்க வேண்டும். நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமியை உள்ளே போடுங்கள். இங்கு வந்து விசாரித்ததற்கு நன்றி எனக் கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)