அதிமுகவின்பொதுக்குழுக்கூட்டம் வரும் 23ம் தேதி கூடவிருக்கிறது. இதன் காரணமாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள்மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அலுவலகத்தின் வெளியே இருந்த தொண்டர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அதில் சிலர் ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுகசெய்தித் தொடர்பாளர்ஜெயக்குமார் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமைகுறித்துப்பேசப்பட்டதாகத்தெரிவித்தார்.

Advertisment

இது அதிமுக அரசியலில் இன்னும்பரபரப்பைக்கூட்டியது. அதேபோல், நேற்று இரவு திடீரென ஓ.பி.எஸ்முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினர். மேலும், இன்று காலை ஓ.பி.எஸ்மற்றும் ஈ.பி.எஸ். இருவரும்தனிதனியேஅவர்கள் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை நடந்த சமயத்தில், ஓ.பி.எஸ்.வசிக்கும் ராஜா அண்ணாமலைபுரம்,பசுமைவழிச்சாலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.