Advertisment

 சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் திடீர் சந்திப்பு

OPS supporter Vaidyalingam has a surprise meeting with Sasikala

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன், "ஓபிஎஸ் தலைமை அலுவகத்திற்கு வருவார். அப்போது காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்ததாக தெரிவித்தார்.

Advertisment

இதனிடையே இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் இன்று சசிகலாவை சந்த்தித்தார். சசிகலா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று தஞ்சாவூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலாவை ஓபிஎஸின் தீவிர ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்தியலிங்கம் சந்தித்தார். இன்று தனக்கு பிறந்தநாள் என்றுகூறி சசிகலாவிடம் வாழ்த்து பெற்றார். மேலும் சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் அதிமுக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திவரும் நிலையில் இருவரது சந்திப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

admk vaithiyalingam sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe