OPS sudden consultation with AIADMK senior leader

கடந்த சனிக்கிழமை அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.21) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

அதைத் தொடர்ந்து, ஈபிஎஸ் தரப்பில் இருந்து அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற; சட்டமன்ற உறுப்பினர்கள், கழகச் செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அதிமுக தலைமையகம் அறிவிப்பை வெளியிட்டது.

Advertisment

ஒரு வாரத்திற்குள் ஈபிஎஸ் தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்த இருப்பதால் அதிமுக பரபரப்பாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் அவருடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். 40 நிமிடங்களுக்கும் மேலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தஆலோசனைக்கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினரான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.