Advertisment

2021க்குள் குடிசை இல்லா தமிழகம்! ஒபிஎஸ் பேச்சு!!

2021ல் குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியுள்ளார்.

Advertisment

ops speech in theni function

முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டம் சார்பில் தேனி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதுநடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பத்தில் நடந்தது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். தொகுதி எம்எல்ஏ ஜக்கையன்வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர்ஓ. பன்னீர்செல்வம், "குடிசை வீடுகளை ஆர்.சி. வீடுகளாக மாற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013உத்தரவிட்டு, அதற்காக 15 லட்சம் கோடி ஒதுக்கினார். ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் குடிசைகளை ஆர்சிவீடுகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 6 லட்சம் கான்கிரீட் வீடுகள்வழங்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் 3000 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. 2021க்குள் குடிசையில்லாதமிழகத்தை உருவாக்கும் ,ஜெயலலிதாவின் கனவே எங்கள் இலக்காக உள்ளது. தேனி மாவட்டத்தில் 6904 மனுக்கள் பெறபட்டது அவற்றில் 2619 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கப்படுகிறது" என்று கூறினர்.

அதன்பின் விழாவில் கலந்து கொண்ட 2619 பயனாளிகளுக்கு 5 கோடியே 68 ஆயிரத்து358ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஒபிஎஸ் வழங்கினார். இதில் திட்ட இயக்குனர்திலகவதி உள்பட பல அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் கலந்து கொண்டனர்.

Theni ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe