Advertisment

“வரவேற்கிறோம், வாய்ப்பிருந்தால் கூட்டணி அமைப்போம்” - ரஜினியின் அறிவிப்பு குறித்து ஓ.பி.எஸ் பேட்டி..!

OPS speech about  Rajini politics entry

Advertisment

வருகின்ற 2021 ஜனவரி மாதம், அரசியல் கட்சித் தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 -ஆம் தேதி வெளியாகும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகைகுறித்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது அரசியல் வருகைக்குப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பகுதியில் அமைய இருக்கும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இடத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், “சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை நாங்கள் வரவேற்கிறோம். அவரது வரவு நல்வரவாக அமையட்டும்” எனத் தெரிவித்தார். ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்குப்பதிலளித்த ஓ.பி.எஸ்.,எதிர்வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம் வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும் என்று கூறினார்.

rajni ops admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe