Advertisment

இதை செய்யாமல் நான் எம்.பி பதவி ஏற்க மாட்டேன்! ஓபிஎஸ் மகன் அதிரடி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓபிஎஸ்ஸின்மகன் ரவீந்திரநாத் குமார். இவர் தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றதால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக கட்சிக்குள் மத்திய மந்திரி யாருக்கு என்று பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில் பாஜக தலைமை அதிமுகவை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தேனி தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டிருக்கிறார்.

Advertisment

raviranath kumar

TAG2 ---------------------------

அப்போது, ”நான் முதன் முதலில் சோழவந்தான் பகுதியிலிருந்துதான் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தேன் அதனால் இங்கு இருந்தே நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனக்கு வாக்களித்த தேனி தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிறகுதான் எம்பி பதவியேற்பதில் உறுதியாக உள்ளேன். மக்களின் அடிப்படை தேவை மற்றும் தொகுதி பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன்” என தெரிவித்தார்.

Advertisment
admk eps loksabha election2019 ops Ravindranath Kumar Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe