Skip to main content

இதை செய்யாமல் நான் எம்.பி பதவி ஏற்க மாட்டேன்! ஓபிஎஸ் மகன் அதிரடி!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார். இவர் தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றதால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக கட்சிக்குள் மத்திய மந்திரி யாருக்கு என்று பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில் பாஜக தலைமை அதிமுகவை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தேனி தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டிருக்கிறார்.


 

raviranath kumar


TAG2 ---------------------------


அப்போது, ”நான் முதன் முதலில் சோழவந்தான் பகுதியிலிருந்துதான் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தேன் அதனால் இங்கு இருந்தே நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனக்கு வாக்களித்த தேனி தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிறகுதான் எம்பி பதவியேற்பதில் உறுதியாக உள்ளேன். மக்களின் அடிப்படை தேவை மற்றும் தொகுதி பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன்” என தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
police action for Youth who tried to enter the vote counting center 

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது கடந்த 27 ஆம் தேதி (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அதோடு ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவுக்கான தொலைக்காட்சியில் இன்று (30.04.2024) காலை 9 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களால் சில நிமிடங்களில் இந்த பழுது சரி செய்யப்பட்டது. 

police action for Youth who tried to enter the vote counting center 

இதற்கிடையே தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கொடுவாரூரியில் உள்ள கம்மவார் சங்கம் கல்லூரி அருகில் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று (29.04.2024) இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ. மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் வி.டி. நாராயனசாமியும், பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபாலும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.