Advertisment

"நான் முதலில் இந்து அப்புறம் தான் எல்லாம்"...அதிரடியாக பேசிய ஓபிஎஸ் மகன்!

கம்பம் அருகே சின்னமனுரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல விழாவில் ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் பேசும் போது, நாம் அனைவரும் ஒற்றுமையாக, வலிமையாக புதிய இந்தியாவையும், புதிய பாரத்தையும் உருவாக்க பட வேண்டும் என்று கூறினார். இது ஒரு பாதுகாப்பான பாரதம். உலக நாடுகளில் இந்தியா ஒரு வல்லரசு நாடக உருவாக வேண்டும் என்பதற்காக, நமக்குள்ள இருக்கின்ற ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். அதை தொடர்ந்து பேசிய ரவீந்திரநாத், நாம் முதலில் இந்து அப்புறம் தான் மற்ற எல்லாம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்று அதிரடியாக பேசியுள்ளார்.

Advertisment

ops son

ஏற்கனவே, அதிமுக கட்சியினர் முத்தலாக் மசோதாவில் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்த போதும், நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு கொடுத்தது அதிமுக கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னும் சிலர் அதிமுக நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு கொடுத்த காரணத்தினால் தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது என்று கூறிவந்தனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நான் இந்து அப்புறம் தான் எல்லாம் என்று ஓபிஎஸ் மகன் பேசியது மீண்டும் அரசியலில் பரபரப்பாகி உள்ளது.

Advertisment
admk ops Ravindranath Kumar Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe