ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேர்தலில் போட்டியிட்ட நாளிலிருந்து இன்று வரை அதிமுகவின் அரசியல் பார்வை அவரை சுற்றியே நடந்து கொண்டிருக்கிறது. நேற்று பதவி பிரமாணம் எடுக்கும் போது தமிழில் பேசியதும், பின்னர் திமுக எம்.பி தயாநிதி மாறனுடன் கை கொடுத்து இருவரும் வாழ்த்து கூறியது அனைவராலும் பேசப்பட்டது. இந்த நிலையில் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பேசுகையில், "ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அண்ணா கூறினார்.

Advertisment

ops son

TAG2 ---------------------------

ஏழைக்களுக்காக தன் வாழ்வையே அர்பணித்தவர் எம்ஜிஆர்.ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா, அவர்களைபோல நீங்களும் ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" இவ்வாறு கூறினார். நேற்று பதவி ஏற்கும் போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க, புரட்சி தலைவி அம்மா வாழ்க என்று பதவி ஏற்றார். இன்றும் சபாநாயகரை வாழ்த்து சொல்லி பேசும் போது எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து தான் சபாநாயகரை வாழ்த்தி உள்ளார்.