Advertisment

ஒபிஎஸ் மகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...?

தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் களத்தில் குதித்திருக்கிறார். இந்த நிலையில்தான் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்விடம் தாக்கல் செய்தார். அப்போது தனது அசையும் அசையா சொத்து விவரங்கள் மற்றும் தன் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றனவா என்ற உறுதிமொழி பத்திரமும் வழங்கினார்.

Advertisment

ravindran

அதில் ரவிந்திரநாத் குறிப்பிட்ட சொத்து மதிப்பு விவரங்கள் வருமாறு, தனது கையில் ரொக்கமாக 82 ஆயிரத்து 714 ரூபாயும், தனது மனைவி கையில் 62 ஆயிரத்து 450 ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வங்கி கணக்குகளில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 63 ரூபாய், பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 410 ரூபாயும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும், தனது மனைவிக்கு பெரியகுளம் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் 41 ஆயிரத்து 307 ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் அதுபோல் தனது மகன் ஜெய்தீப் பெயரில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கி கிளையில் ஒரு லட்சத்தி 63 ஆயிரத்து 153 ஒரு ரூபாயும், மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே கிளையில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 67 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் மணியில் 56 ஆயிரத்து 300 ரூபாயும் விஜயானந்த டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனத்தில் 33 ஆயிரத்து 340 ரூபாய் பங்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மீட்டர் இன்சூரன்ஸில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 575 ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் 6 லட்சத்து 37 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் ஐ-10 கார் மற்றும் 36 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள டயோட்டா கார் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரவீந்திரநாத் குமாரிடம் 120 கிராம் தங்கமும் 1.1 கிலோ வெள்ளியும் அவரது மனைவியிடம் 76வது கிராம் தங்கமும் 4.75 கிலோ வெள்ளியும் 10 கேரட் வைரம் அவரது மகன் ஜெயந்த் இவ்விடம் 120 கிராம் தங்கமும் மகள் ஜெயஸ்ரீ இடம் 300 கிராம் தங்கமும் மகன் ஆதித்யாவிடம் 120 கிராம் தங்கமும் இருப்பதாக சொல்லி உள்ளார். இப்படி ரவீந்திரநாத் குமாரிடம் இருக்கும் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 24 ரூபாய், அவரது மனைவி பெயரில் 31 லட்சத்து 58 ஆயிரத்து 506 ரூபாய், மகன் ஜெய்தீப் 5 லட்சத்து 23 ஆயிரத்து 256 ரூபாய், மகள் ஜெயஸ்ரீ 10 லட்சத்து 60 ஆயிரத்து 67 ரூபாய், மகன் ஆதித்யா 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

விவசாய நிலமாக ரவீந்திரநாத் குமாரிடம் பெரியகுளம் மற்றும் தாமரை குளம் ஆகிய கிராமங்களில் 31.37 ஏக்கர் நிலம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் 2011-ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும் அந்த நிலத்தில் 15 லட்சம் மதிப்பிலான கட்டுமானம் செய்திருப்பதாகவும் தற்போது அதன் மதிப்பு தோராயமாக ஒரு கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 136ரூபாய் எனவும் தனக்கு பூர்வீக சொத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் வங்கிகள் மற்றும் தனிநபர்கள் இடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்த வேண்டிய தொகை 3 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 79 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். அதில் தனது தம்பி பிரதீப்புக்கு 33 லட்சத்து 3 ஆயிரத்து 131 56 ரூபாய், தனது தாய் விஜயலட்சுமிக்கு 83 லட்சத்து பத்தாயிரம் ரூபாயும் கடன் செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தனது தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ravindranath ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe