ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி  செய்த சாதனை!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வேற்றை பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் குமார். இவர் தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த நிலையில் லோக்சபா அதிமுக குழுத் தலைவராக ரவீந்திரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் வெற்றி பெற்ற வேட்பாளர் இவர் ஒருத்தர் என்பதால் இவரை தவிர வேற யாரையும் தேர்வு செய்ய இயலாது. அதிமுகவில் முதல் முறை தேர்வான எம்.பி மக்களவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

ops son

அதை விட முக்கியமாக மக்களவையில் அனைத்து முக்கிய விவாதங்களிலும் ரவீந்திரநாத் குமார் விவாதம் செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அதிமுக மக்களவை குழு தலைவராக தம்பிதுரை போன்ற சீனியர்கள் வகித்த பதவியில் ஒரு மாநிலக் கட்சியின் லோக்சபா குழுத் தலைவராக முதல் முறை எம்பி ஒருவர் தேர்வாகியிருப்பதும் அக்கட்சியினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனால் மக்களவையில் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி அதை நிறைவேற்றினால் ரவீந்திரநாத்குமாருக்கு மேலும் சிறப்பாக இருக்கும் என்று அதிமுக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

admk eps ops parliment Ravindranath Kumar
இதையும் படியுங்கள்
Subscribe