நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழத்தில் திமுக 38 இடங்களை கைபற்றயது.தமிழகத்தில் அதிமுக,பாஜக கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளரான தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுகவில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.

Advertisment

ops son

இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் பாஜகவில் இணைய போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவியது.அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் உள்ளார் என்றும் பரவியது.மேலும் ஓபிஎஸ் தனது மகனுக்காக அனைத்து வேட்பாளர்களையும் கண்டுகொள்ளவில்லை என்றும்,கட்சியை விட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வாங்குவதில் மட்டும் ஆர்வமாக உள்ளார் என்றும் செய்திகள் பரவியது.இதனால் அதிமுகவில் அனைவரும் ஓபிஎஸ்ஸை கண்டுகொள்வதில்லை என்ற செய்தியும் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்றன.இந்த விஷயத்தால் வெற்றி பெற்றதை கூட கொண்டாட முடியாத சூழ்நிலையால் கடும் அப்செட்டில் ஓபிஎஸ் மகன் இருக்கிறார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.