Advertisment

துரைமுருகனை விருந்துக்கு கூப்பிட்ட ஓபிஎஸ் மகன்! அதிர்ச்சியில் இபிஎஸ்!

சமீபத்தில் தி.மு.க. சீனியரான துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆய்வுக்குழு மாவட்டம் தோறும் சென்று, அரசின் திட்டங்களை ஆராய்ந்தது. அந்த வகையில் அந்தக் குழு தேனி மாவட்டத்துக்கும் சென்றார்கள்.அப்போது அங்கு இருக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற போது, துரை முருகனை சால்வை போட்டு உற்சாகமா வரவேற்றிருக்கார் ரவீந்திரநாத். அதேபோல் அங்கிருக்கும் டி.ஆர்.ஓ.வின் மீட்டிங் ஹாலில் துரைமுருகன் கொஞ்சம் ஓய்வெடுத்தப்பவும், அவரை விட்டு நகராமல், அவர் பக்கத்திலேயே உட்கார்ந்துக்கிட்டு, ரொம்பவும் ஜாலியாக அரைமணி நேரத்துக்கும் மேல் பேசிக்கிட்டு இருந்திருக்கார் ரவீந்தர்.

Advertisment

admk

அதன்பின் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு நிதி வருது? விவசாயிகளுக்குச் சேர வேண்டிய 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை சரியா போய்ச் சேருதா? அது தொடர்பான விபரங்களை எனக்குக் கொடுங்கள்னு கலெக்டரிடம் ரவீந்திரநாத் கேட்ட போது, துரைமுருகன் இடைமறித்து, "அதையெல்லாம் உங்ககிட்ட எதுக்குக் கொடுக்கணும்? உங்க அப்பாதானே நிதியமைச்சர். அவரிடமே நீங்க கேட்க விரும்பும் விபரங்களைக் கேட்டுக்கங்க'ன்னு கிண்டலாக சொல்லியிருக்கிறார். அதேபோல் மதிய விருந்துக்கு தன் வீட்டுக்கு துரைமுருகனை ரவீந்திரநாத் கூப்பிட்டப்பவும், "யப்பா ஆளை விடு'ன்னு கழன்றுக்கிட்டாராம் துரைமுருகன். இப்படிப்பட்ட ரவீந்திரநாத் சீனியர்களை வளைச்சிப் போட்டுக் கட்சியையே தன் வசம் கொண்டு வந்துட்டா என்ன பண்றதுன்னு யோசித்ததால் எடப்பாடி தரப்பு மிதுனை களமிறக்குதாம். சேலத்தில் வசிக்கும் மிதுனுக்கு எடப்பாடி தொகுதியில் வாக்காளர் அட்டை வாங்கியிருப்பது கூட அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவரைக் களமிறக்கும் நோக்கத்துக்காகத் தானாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

duraimurugan admk Ravindranath Kumar ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe