Advertisment

அமெரிக்காவில் பேசிய ஓபிஎஸ் மகன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை!

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ் மகன் விருதினைத் தொடர்ந்து, இரண்டாவதாக சர்வதேச வளரும் நட்சத்திரம்- ஆசியா விருதும் பெற்றுள்ளார். இன்னும் பல விருதுகள் அவருக்காகக் காத்திருக்கின்றன என்று அவரது விசுவாசிகள் உற்சாகமாக சொல்கின்றனர். விருது விழாவில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். அப்போது ரவீந்திரநாத் குமார் பேசும் போது, நான் இப்போது தான் முதல் தேர்தலை சந்தித்து நாடாளுமன்றத்துக்கு போயிருக்கிறேன். அதுவும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து ஒரே ஆளாக. நாடாளுமன்றத்துக்கு உள்ளே சென்ற போது நடுக்கமாக இருந்தது. போதிய அனுபவம் இல்லை. ஆனால், இதுவரை 33 மசோதாக்களில் 28 மசோதாக்கள் மீதான உரையில் பேசியிருக்கிறேன். அதற்கு வாய்ப்பு கொடுத்த அதிமுகவுக்கு நன்றி என்றும் ரவீந்திரநாத் குமார் பேசினார்.

Advertisment

ops son

மேலும் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற அடைமொழியை வைத்திருப்பீர்கள். பிரதமர் மோடி அமெரிக்கா வந்த போது இந்த தமிழ் வார்த்தைகளை குறிப்பிட்டு பேசினார். அது நமக்கு பெருமை. இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் நேற்று பேசும் போது, மோடியின் மண்ணான இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன் என்றுரவீந்திரநாத் பேசியுள்ளார். ஓபிஎஸ் மகன் பேசிய கருத்து குறித்து முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாடு என்பது வேறு, மாநிலம் என்பது வேறு, அமெரிக்கர்கள் இங்கு வரும் போது அமெரிக்கன் என்று சொல்கிறோம், அது போல் அவர் அங்கு செல்லும் போது, அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்றும், தற்போது மோடி தானே ஆட்சியில் இருக்கிறார் அந்த காரணித்திற்க்காக அவர் சொல்லிருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்ற சூழ்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவுக்கு மோடி சுற்றுப்பயணம் சென்ற காரணித்தினால் அதை குறிப்பிட்டு சொல்லிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Advertisment
Speech controversy modi politics eps ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe