Advertisment

ஓபிஎஸ் மகன் செயலை பார்த்து மிரண்டு போன அதிமுக சீனியர்கள்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை தவிர, அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அதிமுக வெற்றி பெற்ற தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகள், தேவைகள், தங்கள் பகுதி சார்ந்த பிரச்சனைகளை உடனுக்குடன் தெரிவிக்க தேனி நாடாளுமன்ற உறுப்பிரும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார், "OPR உங்களுடன் நான்" என்ற செயலியை தொகுதி மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.

Advertisment

ops

இதற்கு முன்பு ஆசிரியர் தினத்தன்று தான் படித்த பள்ளிக்கு சென்று தனக்கு எடுத்த ஆசிரியரிடம் ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வு, அந்த தொகுதி மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. தற்போது இந்த செயலியை அறிமுகம் செய்து இருப்பது அந்த தொகுதி மக்கள் வரவேற்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இளம் அரசியல்வாதியான ரவீந்திரந்த்குமாரின் செயலை பார்த்து அதிமுக கட்சியில் இருக்கும் சீனியர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இதே போல் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் தேனி சென்ற போதும் அவரை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து அரசியல் நாகரிகமாக பார்க்கப்பட்டது. ஓபிஎஸ் மகனின் செயல் அதிமுகவில் இருக்கும் பல சீனியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

android Application ravindranath Theni ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe