அதிமுக சார்பில் ஒரே நாளில் (22-10-2021) இரண்டு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு அறிக்கையில் ஓ.பி.எஸ். கையெழுத்து மிஸ்ஸிங். இ.பி.எஸ். கையெழுத்து மட்டுமே உள்ளது. காரணம் - ரெய்டு நடந்தது இ.பி.எஸ். ஆதரவாளர் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் R. இளங்கோவன் வீட்டில் என்பதாலோ?
கடந்த திங்கட்கிழமை (18.10.2021) இதே லஞ்ச ஒழிப்புத்துறை சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது, அதிமுக சார்பில் வெளியிட்ட கண்டன அறிக்கையில், இ.பி.எஸ். கையெழுத்தோடு ஓ.பி.எஸ். கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடையே என்னமோ நடப்பது, அறிக்கை விஷயத்தில் பளிச்சென்று தெரிகிறதே!