Advertisment

செந்தில் பாலாஜியின் பலத்தை பார்த்து ஷாக்கான ஓபிஎஸ்!

தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர்,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சி,கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.மே 23ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற சூழலில் பெரும் எதிர்பார்ப்பை இந்த இடைத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். பிரச்சாரத்தின் போது ஓபிஎஸ், அதிமுகவிற்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜிக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார்.

Advertisment

ops

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும், அதிமுகவின் பிரச்சார கூட்டங்களுக்கு வாக்காளர்களை போகக் கூடாது என்றும் செந்தில் பாலாஜி கூறி வருவதாக தகவல் வருகின்றன என்று கூறினார்.பின்பு நான் 40 வருடங்களுக்கு மேலாக அரசியல் பணியில் இருக்கிறேன் பிரச்சார பொது கூட்டத்துக்கு மக்களை வர வைப்பதற்காக செலவு செய்வார்கள். ஆனால், இவர் அதிமுக பொது கூட்டத்துக்கு மக்களை போகக் கூடாது என்று செலவு செய்கிறார் என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் எவ்வளவு பண பலம் உள்ளது என்று தெரியவில்லை. இந்த தேர்தலுடன் கட்சி மாறி மாறி போகும் செந்தில் பாலாஜிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். டெபாசிட் கூட அவருக்கு கிடைக்கக்கூடாது என்று பிரச்சாரத்தின் போது பேசினார்.

By election Karur Senthilpalaji loksabha election2019 ops
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe