Skip to main content

செந்தில் பாலாஜியின் பலத்தை பார்த்து ஷாக்கான ஓபிஎஸ்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர்,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய  நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சி,கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில்  ஈடுப்பட்டுள்ளனர்.மே 23ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற சூழலில் பெரும் எதிர்பார்ப்பை இந்த இடைத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். பிரச்சாரத்தின் போது ஓபிஎஸ், அதிமுகவிற்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜிக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார்.
 

ops



மேலும், அதிமுகவின் பிரச்சார கூட்டங்களுக்கு வாக்காளர்களை  போகக் கூடாது என்றும் செந்தில் பாலாஜி கூறி வருவதாக தகவல் வருகின்றன என்று கூறினார்.பின்பு நான் 40 வருடங்களுக்கு மேலாக அரசியல் பணியில் இருக்கிறேன் பிரச்சார பொது கூட்டத்துக்கு மக்களை வர வைப்பதற்காக செலவு செய்வார்கள். ஆனால், இவர் அதிமுக பொது கூட்டத்துக்கு மக்களை போகக் கூடாது என்று செலவு செய்கிறார் என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம்  எவ்வளவு பண பலம் உள்ளது என்று தெரியவில்லை. இந்த தேர்தலுடன் கட்சி மாறி மாறி  போகும் செந்தில் பாலாஜிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். டெபாசிட் கூட அவருக்கு கிடைக்கக்கூடாது என்று பிரச்சாரத்தின் போது பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

''ராகுல் காந்தியே வருக... புதிய இந்தியாவை தருக...''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
"Rahul Gandhi come... bring a new India..."- Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், 'ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது'' என்றார்.

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.